இந்தியா

ஆடுகள் அடிபட்டு இறந்ததால் ஆத்திரம்.. வந்தே பாரத் ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல்

Published On 2023-07-11 21:51 IST   |   Update On 2023-07-11 21:51:00 IST
  • ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.
  • இந்த ரெயிலை கடந்த 7ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கி இன்று வந்தே பாரத் ரெயில் சென்றுகொண்டிருந்தது. சொஹாவால் பகுதி அருகே சென்றபோது சிலர் ரெயிலின் மீது சிலர் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை. ரெயில் தொடர்ந்து லக்னோ நோக்கி சென்றது.

இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, ரெயில் மீது கற்களை வீசி தாக்கிய நன்னு பஸ்வான், அவரது மகன்கள் அஜய் மற்றும் விஜய் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நன்னு பஸ்வானுக்குச் சொந்தமான 6 ஆடுகள் கடந்த 9-ந்தேதி வந்தே பாரத் ரெயிலில் அடிபட்டு இறந்து போனதால், அந்த ஆத்திரத்தில் இன்று ரெயில் மீது கற்களை வீசி தாக்கியது தெரியவந்தது.

கோராக்பூர்-லக்னோ இடையிலான வழித்தடத்தில் இயக்கப்படும் 'வந்தே பாரத்' ரெயிலை கடந்த 7ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News