இந்தியா

தீபாவளிக்கு பிறகு வருகிறதா பொது சிவில் சட்டம்?

Published On 2023-11-11 08:22 GMT   |   Update On 2023-11-11 08:25 GMT
  • பாலின சம உரிமை, பெண்களுக்கு சொத்தில் சம பங்கு ஆகியவை இதில் அடங்கும்
  • இருதார முறை தடை செய்யப்படும் என தெரிகிறது

நவம்பர் 12, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு ஒரு வாரத்தில் சட்டசபையின் சிறப்பு தொடர் கூட்டப்பட உள்ளது.

இந்த கூட்டத்தொடரிலேயே பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சி எடுக்கப்பட உள்ளதாகவும், அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மசோதாவிற்கான வரைவில் இடம்பெறும் பல அம்சங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

அனைத்து மதங்களுக்கும் பொதுவான பாலின சம உரிமை, பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உட்பட திருமணம், விவாகரத்து, பரம்பரை சொத்துரிமை, தத்து எடுத்தல் ஆகிய முக்கிய விஷயங்கள் இந்த சட்டத்தின் மைய பொருளாக இருப்பதாக தெரிகிறது.

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18லிருந்து 21 என அதிகரிக்கப்படும் என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், திருமண வயது 18 என்பதில் இந்த சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தற்போது தெரிகிறது.

இருதார மற்றும் பலதார தடை, 'லிவ்-இன்' வாழ்கை முறையை கட்டாய பதிவு செய்தல் ஆகியவை இதில் அடங்கும் என்பதால் இந்த மசோதா சட்டமாவதற்கு முன் பல காரசார விவாதங்களுக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.

Tags:    

Similar News