இந்தியா

கேரளாவில் அடுத்தடுத்து தமிழக பெண் உள்பட 2 பேர் கடத்தி கொலை- மந்திரவாதி கைது

Published On 2022-10-11 09:56 GMT   |   Update On 2022-10-11 09:56 GMT
  • தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற இளம்பெண் ஒருவர் திடீரென மாயமானார்.
  • கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வந்தனர்.

திருவனந்தபுரம்:

கொச்சியில் லாட்டரி சீட்டு விற்கும் பெண்கள் உள்பட சிலர் அடிக்கடி காணாமல் போனார்கள்.

இதுபோல தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற இளம்பெண் ஒருவரும் திடீரென மாயமானார். அவரை தேடி கண்டுபிடித்து தரும்படி பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.

கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது அது பத்தினம்திட்டா அருகே ஆரன்முளா பகுதியில் இருந்தது தெரியவந்தது.

போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது அந்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. யாரோ அவரை கொலை செய்து உடலை அங்கு வீசி சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுபோல காலடி பகுதியை சேர்ந்த இன்னொரு பெண்ணும் இதுபோல கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது இந்த கொலைகளை செய்தது ஷாபி என தெரியவந்தது.

மந்திர, தந்திர வேலைகள் செய்து வந்த ஷாபி, சூனியம் வைக்கவே இந்த கொலைகளில் ஈடுபட்டார் என கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த கொலையில் ஷாபிக்கு மேலும் 2 பேர் உதவி செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அவர்களையும் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News