இந்தியா

ஸ்ரீசைலம் காட்டில் காப்பகத்தை விட்டு வெளியேறிய புலிகள்- கிராமங்களுக்கு புகுந்து அட்டகாசம்

Published On 2023-05-06 04:04 GMT   |   Update On 2023-05-06 04:04 GMT
  • புலிகளில் நடமாட்டத்தை கண்டறிய கிராமப் பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளனர்.
  • புலிகளை கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் ஸ்ரீசைலம் புலிகள் காப்பகத்தில் தற்போது 73 புலிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனால் புலிகள் பல்வேறு ஜோடிகளாக சுற்றி திரிகின்றன.

சில புலிகள் சரணாலயத்தில் உள்ள அடர்ந்த காடுகளை விட்டு வெளியேற தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சரணாலயத்திலிருந்து 2 புலிகள் வெளியே வந்தன.

வனப்பகுதி எல்லையோர கிராமங்களில் கடந்த சில நாட்களாக 2 புலிகள் நடமாடி வருகிறது.

கிராமங்களுக்குள் புகுந்து பசுக்களை புலிகள் அடித்து கொன்றது.

இரவு நேரங்களில் கிராமங்களில் புகுந்து ஆடு, மாடுகளை கொன்று அட்டகாசம் செய்தன.

இதனால் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். புலிகளில் நடமாட்டத்தை கண்டறிய கிராமப் பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளனர்.

மேலும் வன ஊழியர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். புலிகளை கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வனத்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மின்சாரத்துறையினர் கிராம மக்களுக்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

புலிகள் நடமாடுவதால் வனப்பகுதி அல்லது வயல்வெளிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து வினுகொண்டா வனச்சரக அலுவலர் சையத் உசேன் கூறுகையில்:-

"அலைந்து திரியும் புலிகள் மனிதர்களை கொன்று சாப்பிடக் கூடியது அல்ல. இதனால் கிராம மக்கள் பீதியடைய வேண்டாம். புலிகளை காப்பாற்றுவது அனைவரின் பொறுப்பு".

புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், புலிகள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியே வருகின்றன.

அவற்றை மீண்டும் காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News