இந்தியா

வீட்டின் கதவை திறந்தபோது முற்றத்தில் நின்ற புலி- பீதியில் அலறிய கிராம மக்கள்

Update: 2023-03-22 08:45 GMT
  • முதலில் பூனை என்று நினைத்தவர் அருகில் சென்று பார்த்த பின்னர் தான் அது புலி என தெரிந்து கொண்டார்.
  • வனத்துறையினர் வரும் முன்பு புலி அங்கிருந்து தப்பியோடிவிட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தினம்திட்டா கரிகாயம் பகுதியை சேர்ந்தவர் சோமராஜன். இவரது வீட்டின் அருகில் ஏராளமான வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. சம்பவத்தன்று காலையில் சோமராஜன், தூங்கி எழுந்து வீட்டின் முன்பக்க கதவை திறந்தார். முற்றத்தில் பூனை போன்ற விலங்கு நிற்பதை கண்டார்.

முதலில் பூனை என்று நினைத்தவர் அருகில் சென்று பார்த்த பின்னர் தான் அது புலி என தெரிந்து கொண்டார். உடனே அவரும் குடும்பத்தாரும் கதவை பூட்டி கொண்டு அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களும் புலியை பார்த்து அலறியடித்து ஓடினர். மேலும் வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

வனத்துறையினர் வரும் முன்பு புலி அங்கிருந்து தப்பியோடிவிட்டது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புலி நுழைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News