இந்தியா

கைக்குழந்தையுடன் அலுவலகம் வந்து பணி செய்த பெண் மேயர்

Published On 2023-09-19 16:02 IST   |   Update On 2023-09-19 16:02:00 IST
  • நாட்டிலேயே மிக குறைந்த வயதில் மேயர் ஆனவர் என்ற பெருமையை ஆர்யா ராஜேந்திரன் பெற்றார்.
  • நெட்டிசன்கள் ஆர்யா ராஜேந்திரனை பாராட்டியும், வாழ்த்தியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கேரளாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அதிக இடங்களை கைப்பற்றியது. இதில், திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாட்டிலேயே மிக குறைந்த வயதில் மேயர் ஆனவர் என்ற பெருமையை பெற்றார்.

இவருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இளம் எம்.எல்.ஏ.வான சச்சின் தேவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த மாதம் 10-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் மேயர் ஆர்யா ராஜேந்திரன் தனது கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அலுவலக பணிகளை கவனிப்பது போன்றும், கோப்புகளில் கையெழுத்திடுவது போன்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஆர்யா ராஜேந்திரனை பாராட்டியும், வாழ்த்தியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் விமர்சனம் செய்தும் பதிவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News