இந்தியா

தெலுங்கானா: டைரி மில்க் சாக்லேட்டில் புழு... சாப்பிட தகுதியற்றவை என உணவு ஆய்வகம் அறிக்கை

Published On 2024-02-29 11:40 GMT   |   Update On 2024-02-29 11:40 GMT
  • இந்த சாக்லேட்டுகளை தெலுங்கானா மாநில உணவு ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ததில் அதில் வெள்ளைப் புழுக்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.
  • இத்தகைய நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 9-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து கேட்பெரி டைரி மில்க் சாக்லேட்டுகளை சமூக ஆர்வலர் ராபின் சாக்கியஸ் வாங்கியுள்ளார். அதில் புழு ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த சாக்லேட்டுகளை தெலுங்கானா மாநில உணவு ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ததில் அதில் வெள்ளைப் புழுக்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. ஆதலால் இந்த சாக்லேட்டுகள் சாப்பிடுவதற்கு தகுதியில்லாதவை என்று உணவு ஆய்வகம் தெரிவித்துள்ளது.

உணவு ஆய்வகத்தின் அறிக்கையை ராபின் சாக்கியஸ் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குழந்தைகள் அடிக்கடி உண்ணும் பாதுகாப்பற்ற உணவை வழங்குவதற்காக எப்எம்சிஜி (FMCG) நிறுவனங்களை பொறுப்பேற்க வைத்து தண்டிக்க வேண்டிய தருணம் இது. இத்தகைய நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த X பதிவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை அவர் டேக் செய்துள்ளார்.

இந்த பதிவிற்கு கேட்பெரி (Cadbury) பிராண்டின் உரிமையாளரான மாண்டலெஸ் (Mondelez) பதில் அளித்துள்ளார். அதில், உலகின் மிக விரிவான உணவுப் பாதுகாப்பு அமைப்பை நாங்கள் பின்பற்றுகிறோம். மேலும், எங்கள் தயாரிப்புகள் உடல் ரீதியாக எந்த பிரச்சினைகளையும் உருவாக்காது என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Tags:    

Similar News