இந்தியா

நடைபயணமாக வந்த ஆசிரியர் தம்பதி.

குஜராத்தில் இருந்து திருப்பதி வழியாக ராமேஸ்வரம் வரை 4,714 கி.மீ. நடைபயணமாக வரும் ஆசிரியர் தம்பதி

Published On 2022-08-28 16:13 IST   |   Update On 2022-08-28 16:13:00 IST
  • ஆசிரியர் தம்பதி குஜராத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை உள்ள கோவில்களுக்கு நடைபயணமாக சென்று தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.
  • உத்தரகாண்ட், மத்திய பிரதேசத்தில் உள்ள கோவில்களை தரிசனம் செய்து ஐதராபாத் வந்தனர்.

திருப்பதி:

குஜராத் மாநிலம், துவாரகா பகுதியை சேர்ந்தவர் ஹர்தேவ் (வயது 74). இவரது மனைவி சரோஜா (70). இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்களாக வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள்.

இந்த நிலையில் குஜராத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை உள்ள கோவில்களுக்கு நடைபயணமாக சென்று தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி 2 பேரும் தங்களது துணிமணிகள், சமையல் செய்யும் பாத்திரங்களை 3 சக்கர சைக்கிளில் வைத்து நடைபயணம் தொடங்கினர். தினமும் 30 முதல் 40 கி.மீ. வரை நடைபயணமாக வருகின்றனர்.

அவர்கள் உத்தரகாண்ட், மத்திய பிரதேசத்தில் உள்ள கோவில்களை தரிசனம் செய்து நேற்று ஐதராபாத் வந்தனர்.

இதுவரை 137 நாட்களில் 4,700 கி.மீ. வந்ததாகவும், திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து விட்டு ராமேஸ்வரம் வரை நடைபயணமாக செல்ல உள்ளதாகவும், செல்லும் வழியில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்ய உள்ளதாகவும் ஆசிரியர் தம்பதியினர் தெரிவித்தனர்.


Tags:    

Similar News