இந்தியா
கேரளாவில் கவர்னருக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
- போலீசார் நடத்திய விசாரணையில் கவர்னருக்கு வந்த இ மெயில் கோழிக்கோடு பகுதியில் இருந்து வந்திருப்பதை கண்டுபிடித்தனர்.
- கோழிக்கோடு பகுதியில் விசாரணை நடத்தி இ மெயில் அனுப்பிய நபரை கண்டுபிடித்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள கவர்னர் ஆரிப் முகமது கான். இவரது அலுவலகத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு இ மெயில் வந்தது. அதில் 10 நாட்களுக்குள் கவர்னர் கொல்லப்படுவார் என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி கவர்னர் அலுவலக அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் நாகராஜூ உத்தரவிட்டார்.
சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் கவர்னருக்கு வந்த இ மெயில் கோழிக்கோடு பகுதியில் இருந்து வந்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதுபற்றி கோழிக்கோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் கோழிக்கோடு பகுதியில் விசாரணை நடத்தி இ மெயில் அனுப்பிய நபரை கண்டுபிடித்தனர். அவரது பெயர் சம்சுதீன். அவரை பிடித்து விசாரணை நடத்திய போலீசார் பின்னர் சம்சுதீனை கைது செய்தனர்.