இந்தியா

கொல்கத்தாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை- பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

Published On 2022-12-29 21:41 IST   |   Update On 2022-12-29 21:41:00 IST
  • கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா- தராட்டலா வழித்தடத்தின் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
  • ரெயில்வே துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4 திட்டப்பணிகளை பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை உள்பட, ரெயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டபணிகளை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

இதற்காக பிரதமர் மோடி நாளை கொல்கத்தா செல்ல உள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஹவுரா மற்றும் நியூ ஜகல்பூரி பகுதிகளை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா- தராட்டலா வழித்தடத்தின் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். மேலும் ரெயில்வே துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4 திட்டப்பணிகளை பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் நாளை அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News