இந்தியா

தொழில் அதிபர் சுட்டுக்கொலை- பீகாரில் பயங்கரம்

Update: 2022-07-02 07:40 GMT
  • பீகார் மாநிலம் காசிகர் மாவட்டம் கேலாபரி கிராமத்தை சேர்ந்தவர் மேக்நாத் யாதவ்.
  • இன்று காலை இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் அருகில் இருந்த கோவிலுக்கு சென்றார்.

பாட்னா:

பீகார் மாநிலம் காசிகர் மாவட்டம் கேலாபரி கிராமத்தை சேர்ந்தவர் மேக்நாத் யாதவ். தொழில் அதிபர் .

இன்று காலை இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் அருகில் இருந்த கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது மர்ம மனிதர்கள் மேக்நாத் யாதவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் குண்டு பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது மனைவி உடலில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Tags:    

Similar News