இந்தியா

கோப்பு படம்.

கேரளாவில் புதிதாக நிபா தொற்று பாதிப்பு இல்லை

Published On 2023-09-23 05:21 GMT   |   Update On 2023-09-23 05:21 GMT
  • தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் உடல்நல பாதிப்பு ஏற்படுவோருக்கு நிபா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது.
  • நேற்று 7-வது நாளாக யாருக்கும் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதித்து 2 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதையடுத்து உஷாரான சுகாதாரத்துறை அதிகாரிகள், கோழிக்கோட்டில் முகாமிட்டு தொற்று பாதித்து பலியானவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்தனர். அவர்களில் பலருக்கு நிபா சோதனை நடத்தப்பட்டதில், மேலும் 4 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் உடல்நல பாதிப்பு ஏற்படுவோருக்கு நிபா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் புதியதாக யாருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. நேற்று 7-வது நாளாக யாருக்கும் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை.

இருந்தபோதிலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News