இந்தியா

கேரளாவில் ஆசிரியை தற்கொலை வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் கைது

Published On 2022-11-24 10:34 IST   |   Update On 2022-11-24 10:34:00 IST
  • வெங்கரா போலீசார் ஆசிரியை பைஜூவின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.
  • ஆசிரியை பைஜூ எழுதிய டைரி குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பைஜூ என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பைஜூவின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பைஜூ தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வெங்கரா போலீசார் ஆசிரியை பைஜூவின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.

இதில் ஆசிரியை பைஜூ எழுதிய டைரி குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் அவரது தற்கொலைக்கு பள்ளியில் உடன் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் ராம்தாஸ்தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து போலீசார் ராம்தாசை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News