இந்தியா

உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை இன்று நேரலையாக ஒளிபரப்பு

Published On 2022-08-26 04:18 GMT   |   Update On 2022-08-26 05:38 GMT
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
  • இணையதளத்தில் இன்று காலை 10.30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணை முதல் முறையாக இணையதளத்தில் இன்று நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கடந்த 2018 ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாலியல் குற்றங்கள் மற்றும் திருமணம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை தவிர சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணை களை நேரடியாக ஒளிபரப்ப அனுமதி வழங்கியது.

ஆனாலும் சுப்ரீம் கோர்ட்டில் நேரடி ஒளிபரப்பு நடைமுறை உடனே கொண்டு வரப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு தொடங்கியது.

www.webcast.gov.in/events/MTc5mg-- என்ற இணைய தளத்தில் இன்று காலை 10.30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப் படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுவதையொட்டி அவரது அமர்வின் விசாரணை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் இன்று அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்கும் வழக்கு, பெகாசஸ் உள்பட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் அவர் தலைமையில் இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள் இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

Tags:    

Similar News