இந்தியா
null

குழந்தை திருமணம் நிறுத்தம்- மாப்பிள்ளை செய்த வெறிச்செயல்

Published On 2024-05-11 09:15 GMT   |   Update On 2024-05-11 12:48 GMT
  • வாலிபரின் இந்த கொடூர செயல் குறித்து சிறுமியின் குடும்பத்தார் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
  • குழந்தைத் திருமணம் நிறுத்தப்பட்ட சந்தோஷத்தில் இருந்த சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1978-ஆம் ஆண்டில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 18 எனவும், ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டது. இந்த சட்டத்தினால் குழந்தைத் திருமணங்களை தடுக்க முடியும்.

குழந்தை திருமண தடை சட்டம் அமலில் இருக்கும் நிலையில், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் 16 வயது சிறுமியுடன் 32 வயதுடைய வாலிபருக்கு திருமணம் நடைபெற பெரியோர்களால் நிச்சயதார்த்தம் ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வந்து அச்சிறுமியின் நிச்சயதார்த்தை நிறுத்தியுள்ளனர்.

பின்னர் பெற்றோருக்கு அறிவுரை கூறியுள்ளனர். திருமண நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்ட விரக்தியில் இருந்த வாலிபர், அன்று இரவே கொடூரச் செயலை அரங்கேற்றினார். திருமணம் நிறுத்தப்பட்ட கோபத்தில், சிறுமியில் வீட்டிற்கு சென்ற அந்த வாலிபர், சிறுமியை கொலை செய்து தலையை கையோடு எடுத்துச் சென்றுள்ளார்.

வாலிபரின் இந்த கொடூர செயல் குறித்து சிறுமியின் குடும்பத்தார் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தலைமறைவாக உள்ள வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குழந்தைத் திருமணம் நிறுத்தப்பட்ட சந்தோஷத்தில் இருந்த சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News