இந்தியா

சபரிமலையில் 6 வயது சிறுமியை பாம்பு கடித்தது

Published On 2023-11-24 07:46 GMT   |   Update On 2023-11-24 07:46 GMT
  • பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அதிகாலை நேரத்தில் நடந்து சென்றனர்.
  • சபரிமலைக்கு செல்லும் பாதையில் சிறுமியை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரம்:

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்த வருகின்றனர். இந்நிலையில் சபரிமலைக்கு தனது தந்தையுடன் வந்த சிறுமியை பாம்பு கடித்தது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கட்டாக்கடை பகுதியை சேர்ந்த நிரஞ்சனா (வயது 6) என்ற சிறுமி, தனது தந்தை பிரசாந்த்துடன் சபரிமலைக்கு யாத்திரை சென்றார். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அதிகாலை நேரத்தில் நடந்து சென்றனர். சுவாமி அய்யப்பன் சாலையில் நடந்து சென்ற போது சிறுமி நிரஞ்சனாவை பாம்பு கடித்துள்ளது.

இதையடுத்து சிறுமி, பம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு விஷ எதிர்ப்பு ஊசி போடப் பட்டது. பின்பு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமி யின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சபரிமலைக்கு செல்லும் பாைதயில் சிறுமியை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கேரள வனத்துறை மந்திரி சுசீந்திரனுடன், தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.அதனை தொடர்ந்து சன்னிதானத்திற்கு செல்லும் வழிகளில் வனத்துறையை சேர்ந்த பாம்பு பிடிப்பா ளர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.

அவர்கள் சபரிமலைக்கு செல்லும் பாதையில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் வனப்பாதை யில் பக்தர்களுக்கு உதவ வன அலுவலர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

Tags:    

Similar News