இந்தியா

உத்தரப் பிரதேசம் இன்று நல்லாட்சிக்கு பெயர் பெற்றது- பிரதமர் மோடி

Published On 2023-02-10 14:10 IST   |   Update On 2023-02-10 14:10:00 IST
  • உத்தர பிரதேசத்தின் மீது எனக்கு தனி பாசமும், சிறப்பு பொறுப்பும் உள்ளது.
  • 'மோட்டா ஆனாஜ்' என்றும் அழைக்கப்படும் தினையின் நன்மைகள் நிறைந்த உணவு சூப்பர் ஃபுட்டாக உருவெடுத்துள்ளது.

உத்தரப் பிரதசேம் மாநிலத்தில் இன்று உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023 இன்று நடைபெற்றது. 12ம் தேதி ரை நடைபெறும் மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி மோசமான பொருளாதார நிலை கொண்ட மாநிலம் என்று அழைக்கப்பட்ட உத்தரப் பிரதேசம் இன்று நல்லாட்சிக்கு பெயர் பெற்றது என்று பேசினார்.

இது உத்தரப் பிரதேச அரசின் முதன்மை முதலீட்டு மாநாடு. உச்சி மாநாடு கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தலைவர்களை வணிக வாய்ப்புகளை ஆராயவும் கூட்டாண்மைகளை உருவாக்கவும் ஒன்றிணைக்கும்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

உத்தர பிரதேசத்தின் மீது எனக்கு தனி பாசமும், சிறப்பு பொறுப்பும் உள்ளது. மோசமான பொருளாதார நிலை கொண்ட மாநிலம் என்று அழைக்கப்பட்ட உத்தரப் பிரதேசம் இன்று நல்லாட்சிக்கு பெயர் பெற்றது. 'மோட்டா ஆனாஜ்' என்றும் அழைக்கப்படும் தினையின் நன்மைகள் நிறைந்த உணவு சூப்பர் ஃபுட்டாக உருவெடுத்துள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News