இந்தியா

டெல்லியில் இருந்து ஐதராபாத் வந்த விமானத்தில் பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்ற பயணி கைது

Published On 2023-01-24 14:25 IST   |   Update On 2023-01-24 14:25:00 IST
  • பெண் ஊழியரிடம் பயணி ரகளையில் ஈடுபட்ட காட்சிகளை விமானத்தில் பயணம் செய்த சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
  • தற்போது வீடியோ வைரலாகி வருகிறது. சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

புதுடெல்லி:

டெல்லியில் இருந்து ஐதராபாத்திற்கு நேற்று ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று புறப்பட தயராக இருந்தது.

விமானத்திற்கு வந்த பயணிகளை பெண் ஊழியர்கள் அவரவர் இருக்கையில் அமரவைத்தபடி இருந்தனர். அப்போது பயணி ஒருவர், பெண் ஊழியர் ஒருவரிடம் திடீரென தகராறில் ஈடுபட்டார்.

அவருடன் வந்த இன்னொரு பயணியும் பெண் ஊழியரிடம் வாக்குவாதம் செய்தார். இருவரையும் சக பயணிகள் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் இருவரும் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டபடி இருந்தனர்.

இச்சம்பவம் குறித்து பெண் ஊழியர் விமான பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் உடனே விமானத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்ட பயணிகள் இருவரையும் விமானத்தில் இருந்து இறக்கினர். பின்னர் அவர்களிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.

தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இச்சம்பவம் பற்றி டெல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட பயணி அப்சர் ஆலம் என்பவரை மட்டும் கைது செய்தனர்.

இதற்கிடையே பெண் ஊழியரிடம் பயணி ரகளையில் ஈடுபட்ட காட்சிகளை விமானத்தில் பயணம் செய்த சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

அது தற்போது வைரலாகி வருகிறது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News