இந்தியா

நாக்பூர் பல்கலைக்கழக முதுகலை படிப்பில் பா.ஜனதா கட்சி வரலாறு சேர்ப்பு

Published On 2023-09-01 11:26 GMT   |   Update On 2023-09-01 11:30 GMT
  • கல்வியாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்களும் பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளனர்.
  • பாடத்திட்டத்தை காவிமயமாக்க நடக்கும் முயற்சி என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாக்பூர்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் பல்கலைக்கழக எம்.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாறு மற்றும் ராம ஜென்ம பூமி இயக்க வரலாறு ஆகியவற்றை சேர்க்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதே சமயம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க பற்றிய பகுதிகளை நீக்க முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக ஏற்கனவே இடம் பெற்று இருந்த கம்யூனிஸ்டு கட்சி வரலாறு மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகளின் வரலாற்றை நீக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில மாநில கட்சிகளின் வரலாற்றை சேர்க்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முதுகலை வரலாறு பாடத்தின் 4-வது செமஸ்டரில் இந்த பாடத்திட்டங்கள் இடம் பெற உள்ளன. இந்த நிலையில் கம்யூனிஸ்டு மற்றும் தி.மு.க பற்றிய பாடப்பகுதிகள் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா மாநில எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மேலும் கல்வியாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்களும் பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளனர். பாடத்திட்டத்தை காவிமயமாக்க நடக்கும் முயற்சி என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News