இந்தியா
நகை, பணம் பறிக்க 10 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது
- போலீசார் விசாரணையில் ரஷீத் 10-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து நகை, பணம் திருடியது தெரியவந்தது.
- தலைமறைவாக திரிந்த ரஷீத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரஷீத் (வயது 41). இவர் சமீபத்தில் மானந்தவாடியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்தார்.
சில மாதங்கள் கடந்த நிலையில் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்து கொண்டு தலைமறைவாகி விட்டார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை.
சந்தேகம் அடைந்த பெண்ணின் வீட்டார் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணையில் ரஷீத் இதுபோல 10-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து நகை, பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக திரிந்த ரஷீத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.