இந்தியா

16 வயது சிறுமியை திருமணம் செய்த 47 வயது தொழிலாளி- போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவு

Published On 2023-01-31 09:47 IST   |   Update On 2023-01-31 10:44:00 IST
  • 16 வயது சிறுமியை திருமணம் செய்த 47 வயது தொழிலாளி ஏற்கனவே திருமணம் ஆனவர்.
  • தொழிலாளிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் உள்ள மலை கிராமத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக குழந்தைகள் நல குழும அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இடுக்கி சென்றனர். அங்கு அவர்கள் விசாரணை நடத்திய போது இடமலையார் பகுதியில் குழந்தை திருமணம் நடந்து இருப்பது தெரியவந்தது.

அதிகாரிகள் உடனே அந்த கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 47 வயது தொழிலாளி திருமணம் செய்து இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

16 வயது சிறுமியை திருமணம் செய்த 47 வயது தொழிலாளி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இருந்தும் 16 வயது சிறுமியை அவர் திருமணம் செய்துள்ளார். இதுபற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 16 வயது சிறுமியை திருமணம் செய்த நபரை பிடிக்க அவர் தங்கியிருந்த கிராமத்துக்கு சென்றனர்.

போலீசார் தேடுவதை அறிந்த அவர், சிறுமியுடன் தலைமறைவாகி விட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News