இந்தியா

கவுன்சிலர் சாலையில் உருண்டு போராட்டம் செய்த காட்சி.

ஆந்திராவில் கவுன்சிலர் சாலையில் உருண்டு போராட்டம்

Published On 2022-09-10 14:50 IST   |   Update On 2022-09-10 14:50:00 IST
  • மெயின் ரோட்டில் இருந்து கொத்த பசவபுரத்திற்கு செல்லும் 2½ கிலோமீட்டர் தூர சாலை வாகனங்கள் மற்றும் நடந்து செல்ல முடியாமல் சேரும் சகதியமாக உள்ளது.
  • சாலையை சீரமைக்க கோரி நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அதிகாரிகள் சாலையை சீரமைக்காமல் அலட்சியமாக உள்ளனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், சோமேரெட்டி பள்ளி அருகே உள்ள கொத்த பசவபுரத்தை சேர்ந்தவர் தர்மிச்செட்டி ராஜேஷ். இவர் 15-வது வார்டு மண்டல கவுன்சிலராக ஜனசேனா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மெயின் ரோட்டில் இருந்து கொத்த பசவபுரத்திற்கு செல்லும் 2½ கிலோமீட்டர் தூர சாலை வாகனங்கள் மற்றும் நடந்து செல்ல முடியாமல் சேரும் சகதியமாக உள்ளது.

இதனை சீரமைக்க கோரி நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அதிகாரிகள் சாலையை சீரமைக்காமல் அலட்சியமாக உள்ளனர்.

இதனை கண்டித்து ஊர் பொதுமக்களுடன் தர்மி செட்டி ராஜேஷ் சாலையில் படுத்து உருண்டு அங்க பிரதட்சண போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாயத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை அரசு முடக்கி வைத்து உள்ளது. இதனால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.

அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நல்ல புத்தியை கொடுத்து மக்கள்நல பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காக சாலையில் படுத்து அங்க பிரதட்சணம் செய்தேன் என்றார்.

Tags:    

Similar News