இந்தியா

எம்.பி.க்களின் சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்தது- 286 சதவீதம் அதிகரிப்பு

Published On 2023-02-04 09:25 GMT   |   Update On 2023-02-04 09:25 GMT
  • உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியின் 3 முறை பா.ஜ.க. எம்.பி.யாக இருக்கும் வருண் காந்தியின் சொத்து மதிப்பு 2009-ல் ரூ.4.92 கோடியாக இருந்தது. அது 2019-ல் ரூ.60.32 கோடியாக அதிகரித்துள்ளது.
  • பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளத்தின் பதிண்டா தொகுதி எம்.பி. ஹர்சிம்ரத் கவுரின் சொத்து மதிப்பு 2009-ல் ரூ.60.31 கோடியாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. அது 2019-ல் ரூ.217.99 கோடியாக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு 2009 முதல் 2019 வரையில் தேர்வு செய்யப்பட்ட 71 எம்.பி.க்களின் சொத்துகள் சராசரியாக 286 சதவீதம் உயர்த்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களில் ஆளும் பா.ஜ.க. எம்.பி.க்கள் உள்ளனர்.

தேர்தல் வேட்பு மனுவில் எம்.பி.க்கள் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி தொகுதியின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலேயின் சொத்து மதிப்பு 2009-ல் ரூ.51.53 கோடியாக இருந்தது. அது 2019-ல் ரூ.140.88 கோடியாக அதிகரித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியின் 3 முறை பா.ஜ.க. எம்.பி.யாக இருக்கும் வருண் காந்தியின் சொத்து மதிப்பு 2009-ல் ரூ.4.92 கோடியாக இருந்தது. அது 2019-ல் ரூ.60.32 கோடியாக அதிகரித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளத்தின் பதிண்டா தொகுதி எம்.பி. ஹர்சிம்ரத் கவுரின் சொத்து மதிப்பு 2009-ல் ரூ.60.31 கோடியாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. அது 2019-ல் ரூ.217.99 கோடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பிஜாபூர் தொகுதியில் 6-வது முறை எம்.பி.யாக இருந்த ரமேஷ் சந்தப்பாவின் சொத்து 2009-ல் ரூ.1.18 கோடியாகவும், 2014-ல் ரூ.8.94 கோடியாகவும் 2019-ல் ரூ.50.41 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. மோகனின் சொத்து மதிப்பு 2009-ல் ரூ.5.37 கோடியாகவும், 2019-ல் ரூ.75.55 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News