இந்தியா

கடந்த ஒரு ஆண்டில் 13 லட்சம் குடும்பத்தினர் ஒருமுறை கூட சமையல் கியாஸ் பெற விண்ணப்பிக்கவில்லை

Published On 2022-08-06 06:25 GMT   |   Update On 2022-08-06 07:25 GMT
  • சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • கியாஸ் சிலிண்டர் மானியம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா:

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டில் 13 லட்சம் குடும்பத்தினர் ஒரு முறை கூட புதிதாக கியாஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிக்கவில்லை.

கடந்த 3 ஆண்டுகளில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ஒரே குடும்பத்தில் பல இணைப்புகளை வைத்திருப்பது, குடும்பங்களின் இடம்பெயர்வு காரணமாக புதியதாக கியாஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிக்காமல் உள்ளனர்.

ஐதராபாத்தில் கடந்த 2014-ம் ஆண்டு கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு மேல் இருந்தது. தற்போது 1,105-க்கு மேல் வினியோகம் செய்யப்படுகிறது.

ஆந்திரா தெலுங்கானாவில் சமையல் கியாஸ் விலை உயர்வால் விறகுக்கான தேவை அதிகரித்துள்ளது. நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் பெரும்பாலும் மீண்டும் விறகு அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து சமையல் கியாஸ் விநியோகஸ்தர்கள் கூறுகையில்:-

ஆந்திராவில் கொரோனா தொற்று காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் ஏழைகள் அடிக்கடி கியாஸ் வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.

கியாஸ் சிலிண்டர் மானியம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களின் மீது இரட்டை அடியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் 6.5 லட்சம் மற்றும் ஆந்திராவில் 6.2 லட்சம் இணைப்புகளுக்கு புதிய சிலிண்டர் பெற விண்ணப்பிக்கவில்லை.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் தீபம் திட்டம் மற்றும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் கியாஸ் பெற்ற கிராமப்புற மக்கள் ஒரு முறை கூட மீண்டும் சமையல் கியாஸ் பெற விண்ணப்பிக்கவில்லை.

அவர்களால் 1100-க்கு மேல் பணம் செலுத்தி சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்க முடியாது. இதனால் மாற்று எரிபொருளை பயன்படுத்துகின்றனர்.

உணவு பழக்க வழக்கம் வேலைவாய்ப்பு மற்றும் மற்ற எரி பொருட்கள் எளிதில் கிடைப்பதாலும் சமையல் கியாஸை புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். கியாஸ் பயன்பாட்டை விட்டுவிட்டு மற்ற எரிபொருட்களை அதிகளவில் பயன்படுத்துவது சுற்று சூழலுக்கு நல்ல அறிகுறி அல்ல என என்றனர்.

Tags:    

Similar News