இந்தியா

வரும் 17-ந்தேதி முதல் திருப்பதியில் சுப்ரபாதத்திற்கு பதில் ஆண்டாள் திருப்பாவை பாடப்படுகிறது

Published On 2022-12-14 11:12 IST   |   Update On 2022-12-14 11:12:00 IST
  • திருப்பதியில் நேற்று 63,214 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 23,147 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
  • திருப்பதியில் நேற்று 63,214 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 23,147 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

திருப்பதி:

திருப்பதியில் அதிகாலையில் சுப்ரபாத சேவை ஏழுமலையானுக்கு நடத்துவது ஐதீகம். ஆனால், தமிழ் மாதமான, மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை சேவை பாடப்படும்.

இதனையொட்டி, இம்மாதம் 16-ம் தேதி மார்கழி மாதம் தாமதமாக பிறப்பதால், மறுநாள் 17-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 14-ம் தேதி வரை திருப்பாவை சேவை நடைபெறும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும், தேவஸ்தானத்தின் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டம் சார்பில் நாடு முழுவதிலும் உள்ள 250 வைணவ கோவில்களில் திருப்பாவை மற்றும் 12 ஆழ்வார்களின் மகிமைகள் குறித்து மார்கழி மாதம் முழுவதும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் நேற்று 63,214 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 23,147 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News