இந்தியா
null

இணையத்தை கலக்கும் மூதாட்டிகளின் ஸ்கேட்டிங்

Published On 2023-04-21 12:20 IST   |   Update On 2023-04-21 13:02:00 IST
  • மூதாட்டிகள் ஸ்கேட்டிங் செய்வது போன்ற புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது.
  • ஆஷிஷ் என்பவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் வயதான பெண்கள் ஸ்கேட்டிங் செய்வது போல் உள்ளது.

ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வரையப்பட்ட புகைப்படங்கள் தான் சமீப காலமாக இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது. பில்கேட்ஸ், போப் ஆண்டவர், டிரம்ப் என பல்வேறு பிரபலங்கள் குறித்த ஏ.ஐ. படங்கள் ஏற்கனவே வைரலாகி இருந்தன.

இந்நிலையில், மூதாட்டிகள் ஸ்கேட்டிங் செய்வது போன்ற புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது. 'கிராண்ட்மாஸ் ஸ்கேட்டிங்' என்ற தலைப்புடன் ஆஷிஷ் என்பவர் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்களில் வயதான பெண்கள் ஸ்கேட்டிங் செய்வது போல் உள்ளது. அந்த புகைப்படத்தில் சிலர் கேரள பெண்கள் போன்று சட்டை, வேட்டி அணிந்திருந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி லைக்ஸ்களை குவிக்கிறது.

Tags:    

Similar News