இந்தியா

ஆந்திராவில் 13 வயது சிறுமி மர்ம மரணம்: தாய்-கள்ளக்காதலனிடம் விசாரணை

Published On 2023-04-22 15:16 IST   |   Update On 2023-04-22 15:16:00 IST
  • ஜூலியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
  • போலீசார் பத்மாவையும் அவரது கள்ளக்காதலனையும் சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், மச்சிலிப்பட்டினம், ஈடேபள்ளியை சேர்ந்தவர் பத்மா. இவரது மகள் ஜூலி (வயது13). பத்மாவின் கணவர் இறந்து விட்டதால் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

தாயின் கள்ளக்காதலை சிறுமி கண்டித்து வந்தார். இருப்பினும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்து வந்தது.

இதனால் தாய்க்கும் மகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை ஜூலி மர்மமான முறையில் தூக்கில் பணமாக தொங்கினார்.

இது குறித்து தகவல் அறிந்த மச்சிலிப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜூலியின் பிணத்தை மீட்டனர். ஜூலி தூக்கில் தொங்கிய இடத்தின் அருகே சிகரெட் துண்டுகள் கீழே கிடந்தன.

ஜூலியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து போலீசார் பத்மாவையும் அவரது கள்ளக்காதலனையும் சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News