இந்தியா
பெற்றோரிடம் பாசம் காட்டினால் ரூ.1 லட்சம் பரிசு- 199 பேருக்கு சிக்கிம் அரசு விருது
- மாநிலம் முழுவதும் பெற்றோரிடம் பாசம் காட்டியதாக 199 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
- குடும்ப மதிப்புகள் மற்றும் பிணைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு இந்த விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெற்றோர்களை வயதான காலத்தில் பிள்ளைகள் கவனிக்காமல் தவிக்கவிடும் சம்பவங்கள் நடந்து வருகிறது. சிக்கிம் மாநிலத்தில் இது போன்ற சம்பவங்களை தடுக்க மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
வயதான பெற்றோரை பாசம் காட்டி சிறப்பாக கவனித்துக் கொள்ளும் மகன்கள் மற்றும் மகள்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு மற்றும் விருது வழங்கப்படும் என அதில் கூறப்பட்டது.
அதன்படி மாநிலம் முழுவதும் பெற்றோரிடம் பாசம் காட்டியதாக 199 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
சுதந்திர தினமான இன்று 199 பேருக்கு ஷ்ரவன் குமார் விருதுகள் தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படட்டதாக தெரிவித்தனர். குடும்ப மதிப்புகள் மற்றும் பிணைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு இந்த விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.