இந்தியா

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

மும்பை கட்டிட விபத்தில் 19 பேர் பலி - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

Update: 2022-06-28 16:31 GMT
  • கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணை உயிருடன் மீட்டபோது அங்கிருந்தோர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
  • குர்லாவில் கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் இடிபாடுகளில் இருந்து 2 புறாக்கள் உயிருடன் மீட்கப்பட்டன.

புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலத்தின் குர்லாவின் கிழக்கு பகுதியில் உள்ள நாயக் நகரில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது.

தகவலறிந்து தீயணைப்புப் படையினரும், போலீசாரும் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையே, குர்லா கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குர்லாவில் கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணை உயிருடன் மீட்டபோது அங்கிருந்தோர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மேலும், 2 புறாக்களும் உயிருடன் மீட்கப்பட்டன.

இந்நிலையில், மும்பை கட்டிட விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News