தொழில்துறை ஆல்கஹால் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கே அதிகாரம்- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
- தொழில்துறை மதுவைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு.
- 8 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
புதுடெல்லி:
தொழில்துறை ஆல்கஹால் உற்பத்தியில் மத்திய அரசுக்கு ஒழுங்குமுறை அதிகாரம் இருப்பதாக கடந்த 1997-ம் ஆண்டு 7 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு 2010-ம் ஆண்டு 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தொழில்துறை ஆல்கஹால் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு அளித்தனர். தொழில்துறை மதுவைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு என்று 8 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உள்பட 8 நீதிபதிகள், மத்திய அரசுக்கு ஒழுங்குமுறை அதிகாரம் இல்லை. தொழில்துறை மதுபானம் தொடர்பான சட்டங்களை உருவாக்கும் மாநிலத்தின் அதிகாரத்தை பறிக்க முடியாது என்று தெரிவித்தனர். பெரும்பான்மையான தீர்ப்பை நீதிபதி பி.வி. நாகரத்னா ஏற்கவில்லை.