இந்தியா

ஏழையின் வீட்டை ஒளிர செய்யும் பண்டிகை வேண்டும் - அகிலேஷ் யாதவ்

Published On 2023-11-12 12:02 GMT   |   Update On 2023-11-12 12:02 GMT
  • 25 ஆயிரம் தன்னார்வலர்களை கொண்டு 22 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன
  • வறுமை எண்ணெயை எடுக்க தள்ளி விட்டதாக அகிலேஷ் தெரிவித்தார்

இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் இந்துக்களின் புனித தெய்வமான ஸ்ரீஇராமருக்கான கோயில், அடுத்த வருடம் ஜனவரி மாதம் பக்தர்களுக்கு திறக்கப்பட உள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியாவில் தீபாவளியை குறிக்கும் வகையிலும், ஸ்ரீஇராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டியும், சரயு நதிக்கரையில், 25 ஆயிரம் தன்னார்வலர்களை கொண்டு 22 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.

கின்னஸ் உலக சாதனை பதிவு நிறுவனம், டிரோன் மூலம் இதனை பதிவு செய்து எண்ணிக்கையை உறுதி செய்து, இதை ஒரு உலக சாதனை என குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து சமாஜ்வாதி ஜனதா கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டார்.

அந்த வீடியோவில் நதிக்கரையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்குகளில் இருந்து சில குழந்தைகள் எண்ணெயை எடுத்து பாத்திரங்களில் ஊற்றி கொள்கின்றனர்.

இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் கருத்தை பதிவிட்ட யாதவ் தெரிவித்திருப்பதாவது:

பக்தி ஒரு புறம், வறுமை ஒரு புறம். எரியும் விளக்குகளில் இருக்கும் எண்ணெயை குழந்தைகள் எடுக்கும் நிலைக்கு வறுமை அவர்களை தள்ளி விட்டது. ஒவ்வொரு ஏழையின் வீடும் ஒளி பெற செய்யும் ஒரு பண்டிகையை நாம் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags:    

Similar News