இந்தியா

மும்பையில் இருந்து 2 வந்தே பாரத் ரெயில்கள்- பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கிறார்

Published On 2023-02-09 21:23 IST   |   Update On 2023-02-09 21:23:00 IST
  • லக்னோவில் நாளை உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
  • மகாராஷ்டிராவில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 4 ஆக உயரும்.

புதுடெல்லி:

பிரதமர் மோடி நாளை உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலீட்டாளர் மாநாடு, வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

காலை 10 மணியளவில் லக்னோவில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், உலகளாவிய வர்த்தகக் கண்காட்சி மற்றும் முதலீட்டாளர்களுக்கான இன்வெஸ்ட் உ.பி. 2.0 என்ற அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நாளை தொடங்கி 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

லக்னோ நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிற்பகல் மகாராஷ்டிரா வரும் பிரதமர் மோடி, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் இருந்து மும்பை-சோலாப்பூர் வந்தே பாரத் மற்றும் மும்பை-சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் ஆகிய ரெயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் மகாராஷ்டிராவில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 4 ஆக உயரும்.

புதிய இந்தியாவுக்கான சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இது ஒரு முக்கியமான படியாக இருக்கும் என ரெயில்வே அமைச்சகம் கூறி உள்ளது. 

Tags:    

Similar News