இந்தியா

பிரதமர் மோடி

காபூல் குருத்வாராவில் பயங்கரவாத தாக்குதல் - பிரதமர் மோடி கண்டனம்

Published On 2022-06-18 17:57 GMT   |   Update On 2022-06-18 17:57 GMT
  • காபூல் குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • குருத்வாரா மீதான கோழைத்தனமான தாக்குதலை அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.

புதுடெல்லி:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கர்தே பர்வான் என்ற பகுதியில் சீக்கிய குருத்வாரா உள்ளது. இங்கு இன்று காலை சீக்கியர்கள் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் குருத்வாராவுக்குள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் குருத்வாராவின் காவலாளி அகமது மற்றும் சீக்கிய பக்தர் ஒருவர் பலியாகினர்.

குருத்வாரா மீதான தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தி உள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காபூலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாரா மீது கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல் நடத்தியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த தாக்குதலை கண்டிப்பதோடு, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News