இந்தியா

மாநிலங்களவையில் மன்மோகன் சிங்கை வெகுவாக பாராட்டி பேசிய பிரதமர் மோடி

Published On 2024-02-08 12:46 IST   |   Update On 2024-02-08 13:26:00 IST
  • மன்மோகன் சிங் ஆறு முறை மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
  • இரண்டு முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவை எம்.பி.க்களில் 68 பேரின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையில் முடிவடைகிறது. இதையொட்டி அவர்களுக்கு பிரியாவிடை கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பேசினார்.

அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை வெகுவாக பாராட்டினார். அப்போது "மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு வாக்கு அளிக்க மாநிலங்களவைக்கு வந்து, ஜனநாயகததின் வலிமைக்கு உதவியாக இருந்தார். மன்மோகன் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது. நீண்ட காலம் இந்த அவையையும் நாட்டையும் அவர் வழி நடத்திய விதம் மறக்க முடியாது. அவர் நம்மை தொடர்ந்து வழி நடத்த வேண்டிக் கொள்கிறேன்.

ஜனநாயகத்தை வலுப்படுத்தியவர். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர். தனது கடமைகளை சிறப்புற நிறைவேற்றியர். நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பு என்றும் நினைவு கூரத்தக்கது." என்றார்.

மன்மோகன் சிங் 2014 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் இந்திய பிரதமாக இருந்தார். ஆறுமுறை மாநிலங்களை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News