இந்தியா
மலேசியா பள்ளி தீ விபத்தில் காயமடைந்த மகனை தோளில் சுமந்து வந்த பவன் கல்யாண்
- மலேசியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
- பவன் கல்யாண் தனது மனைவியுடன் சிங்கப்பூர் சென்றார்.
ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் நடந்த தீ விபத்தில் மார்க் ஷங்கர் சிக்கி காயமடைந்தார்.
அவருக்கு மலேசியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் பவன் கல்யாண் தனது மனைவி அன்னலெஜினோவாவுடன் சிங்கப்பூர் சென்றார். இன்று காலை சிங்கப்பூரில் இருந்து மகனை அழைத்துக் கொண்டு ஷம்ஷாபாத் விமான நிலையம் வந்தடைந்தார்.
விமானத்தில் இருந்து தனது மகனை பவன் கல்யாண் தோளில் சுமந்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.