ஜனநாயகத்தை பலவீனமாக்கும் தீய சக்திகளுக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும் - கார்கே
- காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது.
- ஜனநாயகத்தை பலவீனமாக்கும் தீய சகதிகளுக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும்.
பீகார் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக-ஜேடியுவின் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது. பீகார் தேர்தலிலும் வாக்கு மோசடி நடந்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பீகார் தேர்தல் முடிவுகள் ஆச்சர்யம் அளிப்பதாவதும், அது குறித்து ஆய்வு செய்வோம் என்றும் ராகுல் காந்தி தெரிவிரித்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், பீகார் மக்களின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அரசியலமைப்பு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி ஜனநாயகத்தை பலவீனமாக்கும் தீய சகதிகளுக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும்.
பீகார் தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து தோல்விக்கான காரணங்களை கண்டறிவோம். காங்கிரஸ் தொண்டர்கள் தோல்வியால் துவண்டுவிட வேண்டாம்.
காங்கிரசின் மகாபந்தன் கூட்டணிக்கு வாக்களித்த பீகார் மக்களுக்கு நன்றி. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம்.
மக்களுடன் மக்களாக அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் எங்கள் போராட்டம் போராட்டம் மிக நெடியது. அதில் உண்மையுடன் முழு அர்ப்பணிப்புடன் போராடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.