இந்தியா

முகேஷ் அம்பானி மகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன

Published On 2022-11-21 07:56 IST   |   Update On 2022-11-21 07:56:00 IST
  • முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி.
  • இஷா அம்பானிக்கும் ஆனந்த் பிரமலுக்கும் 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

மும்பை :

தொழில் அதிபரும், இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி. இவருக்கும், பிரமல் குழுமத்தின் தலைமை இயக்குனரான ஆனந்த் பிரமலுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இஷா அம்பானிக்கும், ஆனந்த் பிரமலுக்கும் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக முகேஷ் அம்பானியும், அவரது மனைவி நிடா அம்பானி மற்றும் ஆனந்தின் பெற்றோர் அஜய் பிரமல், ஸ்வாதி ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், "நேற்று முன்தினம்(சனிக்கிழமை) இஷாவுக்கும், ஆனந்துக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்தது. பெண் குழந்தைக்கு ஆதியா எனவும், ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரு குழந்தைகளும் நலமாக உள்ளனர்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஷா அம்பானி தற்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் இயக்குனராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News