வக்பு திருத்தச் சட்டத்தால், சிக்கலில் சிக்கிய முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீடு
- நான்கரை லட்சம் சதுர அடி நிலத்தை சுமார் ரூ.21 கோடிக்கு வாங்கியுள்ளார்.
- வழக்கு நீண்ட காலமாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானியின் ஆடம்பரமான இல்லமான ஆன்டிலியா, நாட்டின் மிகவும் ஆடம்பரமான வீடுகளில் ஒன்றாகும். பக்கிங்ஹாம் அரண்மனைக்கு பிறகு 2-வது மிக விலையுயர்ந்ததாக திகழம் இந்த வீடு ரூ.15,000 கோடி மதிப்புள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலராலும் ஆச்சரியப்பட்ட இந்த வீடு தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
இதற்கு காரணம் அதன் ஆடம்பர வசதிகள் குறித்தோ வீட்டின் உரிமையாளர்கள் குறித்தோ அல்ல... ஆம் சமீபத்தில் வக்பு திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஜனாதிபதியால் ஒப்புதல் அளிக்கப்பட்டு அது சட்டமாகியுள்ளது. அந்த சட்டத்தின் படி, வக்பு வாரியத்தின் சொத்தை தனியார் பயன்பாட்டிற்கு விற்க முடியாது. இதற்கும், அந்த வீட்டிற்கும் எந்த சம்பந்தம் என்று தானே எண்ணத்தோன்றுகிறது.
மும்பையின் பரேட் சாலை பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஆடம்பரமான வீடான ஆன்டிலியா, வக்பு வாரியத்தின் நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முகேஷ் அம்பானி 2002 ஆம் ஆண்டில் வக்பு வாரியத்திடமிருந்து நான்கரை லட்சம் சதுர அடி நிலத்தை சுமார் ரூ.21 கோடிக்கு வாங்கியுள்ளார்.
மேலும், நிலத்தின் முந்தைய உரிமையாளரான கரீம் பாய் இப்ராஹிம், மதக் கல்வி மற்றும் அனாதை இல்லம் கட்டுவதற்காக வக்பு வாரியத்திற்கு நிலத்தை வழங்கியுள்ளார். ஆனால் இந்த இடம் விற்பனையில் அப்படி இல்லை. ஏனெனில் அந்த நிலம் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானிக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு நீண்ட காலமாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, வக்பு சட்டம் அமலாகியுள்ளதால் இது அம்பானிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கின் முடிவு அம்பானி குடும்பத்திற்கு எதிராக வழங்கினால், அவர்கள் வீட்டை காலி செய்ய வேண்டியிருக்கும்.