இந்தியா

மராத்தா இட ஒதுக்கீட்டுப் போராட்டம் வெற்றி: மனோஜ் ஜரங்கே

Published On 2025-09-02 20:59 IST   |   Update On 2025-09-02 20:59:00 IST
  • மும்பை ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • அவருக்கு ஆதரவாக மராத்தா ஆதரவாளர்கள் மும்பை தெருக்களில் போராட்டம் நடத்தினர்.

மும்பை:

மராத்தாக்களுக்கு ஓபிசி பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜரங்கே போராட்டம் நடத்தி வருகிறார்.

இவர் ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவருக்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்துள்ள மராத்தா ஆதரவாளர்கள் மும்பை தெருக்களில் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் மனோஜ் ஜராங்கேவை மாநில அமைச்சர் உதய் சாமந்த நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், எங்கள் கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது எனக்கூறிய மனோஜ் ஜராங்கே ஜூஸ் குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, மனோஜ் ஜராங்கே கூறுகையில், எங்களுக்கு இன்று தீபாவளி. ஏனெனில் நாங்கள் விரும்பியதைப் பெற்றுள்ளோம். இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற மராத்தா போராட்டம் வெற்றி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News