இந்தியா
மேற்கு வங்கத்தில் SIR பணிகளால் உயிரிழந்த 39 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - மம்தா அறிவிப்பு
- மன அழுத்தத்தால் நோய்வாய்ப்பட்ட நான்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் உட்பட 13 அதிகாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பொதுமக்களிடையே பரவலான அச்சத்தையும் பீதியையும் உருவாக்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளால் மன அழுத்தத்தில் தற்கொலை மற்றும் திடீர் மரணம் அடைந்த 39 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
நான்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் உட்பட இறந்த 39 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அதே நேரத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் மன அழுத்தத்தால் நோய்வாய்ப்பட்ட நான்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் உட்பட 13 அதிகாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
நவம்பர் 4 முதல் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பொதுமக்களிடையே பரவலான அச்சத்தையும் பீதியையும் உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.