இந்தியா

டெல்லியில் சுதந்திரமாக வாழ்கிறேன், ஆனால் சொந்த நாடு திரும்ப விரும்புகிறேன்- ஷேக் ஹசீனா

Published On 2025-10-29 21:23 IST   |   Update On 2025-10-29 21:23:00 IST
  • மில்லியன் கணக்கான மக்கள் அவாமி லீக்கை ஆதரிக்கிறார்கள்.
  • செயல்படும் ஒரு அரசியல் அமைப்பை விரும்பினால், மில்லியன் கணக்கான மக்களின் வாக்குரிமையை பறிக்க முடியாது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இளைஞர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வசித்து வரும் ஷேக் ஹசீனா, "டெல்லியில் சுதந்திரமாக வாழ்கிறேன். ஆனாலும், சொந்த நாடு திரும்ப விரும்புகிறேன். அதேவேளையில், தேர்தலுக்கு பிறகு எந்த அரசு அமைந்தாலும் வங்கதேசம் திரும்ப போவதில்லை. தனது கட்சியை ஒதிக்கு வைத்து விட்டு தொடர்ந்து இந்தியாவில் இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

அவாமி லீக் கட்சிக்கு தடைவிதித்தது, அநீதி மட்டுமல்ல. ஆது தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்வதாகும். அடுத்த அரசாங்கம் தேர்தல் சட்டப்பூர்வத்தை கொண்டிருக்க வேண்டும். மில்லியன் கணக்கான மக்கள் அவாமி லீக்கை ஆதரிக்கிறார்கள். எனவே தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள். செயல்படும் ஒரு அரசியல் அமைப்பை விரும்பினால், மில்லியன் கணக்கான மக்களின் வாக்குரிமையை நீங்கள் பறிக்க முடியாது.

அவாமி கட்சி வாக்காளர்களை மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க நாங்கள் கேட்கமாட்டோம். பொது அறிவு மேலோங்கி, நாங்களே தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவோம் என்று இன்னும் நம்புகிறோம். வங்கதேசத்தின் எதிர்காலத்தில் அவாமி லீக் இறுதியாக முக்கிய பங்கு வகிக்கும் வகையில் திரும்பும். அது அரசாக அல்லது எதிர்க்கட்சியாக இருக்கலாம். எனது குடும்பத்தினர் தலைமை தாங்க தேவையில்லை.

நாம் அனைவரும் விரும்பும் வங்கதேசத்திற்காக, முதலில் அரசியலமைப்பு சட்டம் திரும்ப வேண்டும். அரசியல் நிலைத்தன்மை ஏற்பட வேண்டும். தனிநபர் அல்லது குடும்பம் நாட்டின் எதிர்காலத்தை வரையறுக்க முடியாது.

அரசாங்கம் சட்டப்பூர்வமாகவும், அரசியலமைப்புச் சட்டம் நிலைநிறுத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கு உண்மையிலேயே நிலைத்திருக்கும் வரையில் நான் சொந்த நாடு செல்ல விரும்புகிறேன்.

இவ்வாறு ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News