இந்தியா

கர்நாடகா சட்டசபை தேர்தல் லைவ் அப்டேட்ஸ்- பரபரப்பை எகிறச் செய்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்

Published On 2023-05-10 07:10 IST   |   Update On 2023-05-10 19:40:00 IST
2023-05-10 06:25 GMT

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் மைசூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், " கர்நாடக சட்டசபை தேர்தில் மக்கள் வந்து, வாக்களித்து, நல்ல ஜனநாயகத்திற்கு ஒரு நல்ல தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நானும் வாக்களித்தேன். ஜனநாயகத்தில் நாம் பங்கேற்க வேண்டும்" என்றார்.

2023-05-10 06:18 GMT

கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

2023-05-10 06:11 GMT

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி பெங்களூருவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயண மூர்த்தி, "முதலில் நாங்கள் வாக்களித்தால்தான் இது நல்லது, இது நல்லதல்ல என்று சொல்ல முடியும்" என்றார்.

பின்னர் சுதா மூர்த்தி கூறுகையில் "எங்களைப் போன்ற வயதானவர்கள் காலை 6 மணிக்கே வந்து வாக்குகளை செலுத்தியுள்ளோம். எங்களைப் பார்த்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

2023-05-10 05:41 GMT

கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா வாக்களித்தார். பின்னர் அவர் பேசுகையில், "கர்நாடகாவில் பாஜகவை ஆதரிக்க மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் தயாராக உள்ளனர். நாங்கள் கிட்டத்தட்ட 140 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மை பெறுவோம். தேசியவாத முஸ்லீம்கள், தேசியவாத கிறிஸ்தவர்கள், இந்துத்துவவாதிகள் என அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்கின்றனர். காங்கிரஸ் & ஜே.டி.(எஸ்) முஸ்லீம்களை திருப்திப்படுத்த முயன்றாலும் தேசியவாத முஸ்லிம்கள் எங்களுடன் இருக்கிறார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற தேச விரோத அமைப்புகளை ஆதரிப்பவர்கள் காங்கிரஸுடன் இருக்கிறார்கள்'' என்றார்.

2023-05-10 05:19 GMT

கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் பேசிய அவர், "உழைக்கும் கட்சிக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த நாட்டின் எதிர்காலமும் இந்தத் தேர்தலில் சம்பந்தப்பட்டிருக்கிறது. காங்கிரசுக்கு 130 முதல் 150 இடங்கள் வரை கூட கிடைக்கும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்" என்றார்.

2023-05-10 04:50 GMT

கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான சதானந்த கவுடா வாக்களித்த பிறகு கூறுகையில், " மக்கள் அனைவரும் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும். எனது கட்சி அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சியை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.

2023-05-10 04:32 GMT

கர்நாடக முன்னாள் முதல்வரும், ஹூப்ளி-தர்வாட் மத்திய சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஜெகதீஷ் ஷெட்டர் வாக்களித்தார்.

2023-05-10 04:29 GMT

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஈஸ்வர் காந்த்ரே, பிதார் பால்கி பகுதியில் வாக்களித்தார்

2023-05-10 04:26 GMT

முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான ஜி.பரமேஸ்வரா துமகுரு சித்தார்த் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

2023-05-10 04:09 GMT

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 7.92 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News