ஆந்திரா, தெலுங்கானாவில் மதுபான விலை 15 சதவீதம் உயர்வு
- விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
- ஆந்திரா, தெலுங்கானாவில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் மதுபான விலைகள் குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தார்.
தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த பிறகு முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு மதுபான விலைகளை கணிசமாக குறைத்தார். மேலும் மதுபான விலைகளை குறைக்க தயாரிப்பு நிறுவனங்கள் முன் உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில் ஆந்திராவில் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்களை தவிர்த்து மற்ற மதுபானங்கள் விலையை கலால் துறை 15 சதவீதம் உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தெலுங்கானா மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பீர் வகைகள் மீது 15 சதவீத விலையை உயர்த்தி உள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனால் தெலுங்கு மாநிலங்களில் அதிக அளவு பீர் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பீரின் விலையை மாநில அரசு உயர்த்தி உள்ளது.