இந்தியா

லட்சத்தீவின் தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கு 10 ஆண்டு ஜெயில்: கேரள கோர்ட் தீர்ப்பு

Published On 2023-01-12 11:48 GMT   |   Update On 2023-01-12 11:48 GMT
  • முன்னாள் மத்திய மந்திரி சையீத்தின் உறவினரை தாக்கியதாக புகார் எழுந்தது.
  • கேரளாவின் கவரட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது

திருவனந்தபுரம்:

கேரளாவையொட்டியுள்ள லட்சத்தீவின் தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருப்பவர் முகமது பைசல். இவர் லட்சத்தீவு தொகுதியின் எம்.பி.யாகவும் உள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது நடந்த மோதலில் இவர் முன்னாள் மத்திய மந்திரி சையீத்தின் உறவினரை தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முகமது பைசல் மற்றும் அவரது சகோதரர்கள் உள்பட 4 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணை கேரளாவின் கவரட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, லட்சத்தீவு தொகுதியின் எம்.பி.யும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான முகமது பைசல் மற்றும் அவரது சகோதரர்கள் உள்பட 4 பேருக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து முகமது பைசல் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். 

Tags:    

Similar News