இந்தியா

கர்நாடக தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் தயார்

Published On 2023-03-10 14:31 IST   |   Update On 2023-03-10 14:31:00 IST
  • கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
  • ஆட்சியை கைப்பற்ற ஆளும் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே மீண்டும் பலப்பரீட்சை நடைபெற உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற ஆளும் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே மீண்டும் பலப்பரீட்சை நடைபெற உள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

நேற்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும் தயாரித்து காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர். விரைவில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை கார்கே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News