இந்தியா

கர்நாடகாவில் அதிகாரிகள் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை

Published On 2025-06-24 10:43 IST   |   Update On 2025-06-24 10:43:00 IST
  • வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகள் வீடுகளில் அடிக்கடி லோக்ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
  • சிவமொக்கா, ஷிகாரிபுரா மற்றும் ஹோசநகர், சிக்கமகளூரு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடந்து வருகிறது.

பெங்களூரு:

கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகள் வீடுகளில் அடிக்கடி லோக்ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி சொத்து ஆவணங்களை கைப்பற்றி வருகிறார்கள்.

அதே போல் இன்றும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகள் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் பேரில் நான்கு நாட்களில் ஓய்வு பெற இருக்கும் பெங்களூரு பஞ்சாயத்து ராஜ் என்ஜினீயரிங் துறை அதிகாரி மல்லிகார்ஜூன் அலிபூரின் வீடு, கலபுரகியில் உள்ள அவரது அலுவலகம், சன்னூர் பி.டி.ஓ. ராமச்சந்திரன் வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதே போல் சிவமொக்கா, ஷிகாரிபுரா மற்றும் ஹோசநகர், சிக்கமகளூரு, உள்ளிட்ட இடங்களிலும் இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது.

Tags:    

Similar News