இந்தியா

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு

Published On 2023-09-18 17:30 IST   |   Update On 2023-09-18 17:30:00 IST
  • தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
  • வினாடிக்கு 12,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை.

தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.

இதற்கிடையே, வினாடிக்கு 12,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு கோரிக்கை வைத்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News