இந்தியா

முகேஷ் அம்பானி

ஜியோ 5ஜி சேவை- தீபாவளி முதல் அமலுக்கு வரும் என முகேஷ் அம்பானி தகவல்

Published On 2022-08-29 15:07 IST   |   Update On 2022-08-29 16:03:00 IST
  • அனைத்து நகரம், தாலுகா வாரியாக ஜியோ 5ஜி சேவை வழங்குவோம்.
  • மிக உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் 5ஜி சேவை.

மும்பை:

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் பேசிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது:-

ரிலையன்ஸ் ஜியோ உலகின் அதிவேக 5ஜி சேவை திட்டத்தை தயாரித்துள்ளது. தீபாவளிக்கு, டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்கள் உட்பட பல முக்கிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவோம். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள், இந்தியாவின் அனைத்து நகரம், தாலுகா வாரியாக ஜியோ 5ஜி சேவையை வழங்குவோம்.

ஜியோ 5ஜி சேவை அனைவரையும், அனைத்து இடங்களையும் மிக உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் இணைக்கும். சீனா மற்றும் அமெரிக்காவை விட இந்தியாவை தரவு பொருளாதாரமாக மாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஜியோ அமைப்பின் தலைவர் ஆகாஷ் அம்பானி, இந்தியா முழுவதும் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News