இந்தியா

குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் ரூ.249 ப்ளானை நீக்கியது ஜியோ

Published On 2025-08-18 21:38 IST   |   Update On 2025-08-18 21:38:00 IST
  • தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்கிய ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டம் ரூ.249 ரீசார்ஜ் ஆகத்தான் இருந்தது.
  • ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் தொகுப்பில் இருந்து ரூ.249 மதிப்புள்ள திட்டத்தை நீக்கி உள்ளது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவுடன் வரும் எந்த பேஸிக் ரீசார்ஜும் இல்லை என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.

தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்கிய ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டம் ரூ.249 ரீசார்ஜ் ஆகத்தான் இருந்தது. இனிமேல் இது ரீசார்ஜ் செய்ய முடியாது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஜியோ நிறுவனம் 1 ஜிபி தினசரி டேட்டாவுடன் வரும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

இருப்பினும் ஜியோவின் ரூ.249 திட்டத்தை விட மலிவான திட்டங்கள் இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. அதாவது ரூ.189, ரூ.198 மற்றும் ரூ.239 ஆகிய திட்டங்கள் இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. ஆனால் இந்த திட்டங்கள் ரூ.249 திட்டத்தை விட கணிசமாக குறைவான வேலிடிட்டியை வழங்குகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ நிறுவனம் திடீரென நீக்கியது ஜியோ பயனார்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

Tags:    

Similar News