இந்தியா

சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகள்

மலையாள சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர் பிரித்விராஜ் வீடுகளில் ஐ.டி. ரெய்டு- முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

Published On 2022-12-17 17:49 IST   |   Update On 2022-12-17 17:51:00 IST
  • கொச்சியில் உள்ள இவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது.
  • நடிகர் பிரித்விராஜ், தமிழில் பாரிஜாதம், மொழி உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் சில நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறையினருக்கு புகார்கள் சென்றது.

இதையடுத்து மலையாள நடிகர் பிரித்விராஜ் மற்றும் பிரபல மலையாள பட தயாரிப்பாளர்கள் ஆண்டனி பெரும்பாவூர், ஆண்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், ஆபிரகாம் மேத்யூ உள்பட பலரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கொச்சியில் உள்ள இவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று இந்த சோதனை நடந்தது.

படத்தயாரிப்புகளுக்கு பணம் சேகரித்தது, ஓ.டி.டி. தளங்களுக்கு படங்களை விற்பனை செய்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 6 மணிநேரம் இந்த சோதனை நடந்தது.

இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் இது தொடர்பான விபரங்களை பின்னர் தெரிவிப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடிகர் பிரித்விராஜ், தமிழிலும் பாரிஜாதம், மொழி உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

Tags:    

Similar News